சென்னை,

ல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் சாலையில் இறங்கி போராடுவோம் என்று மீண்டும் அழைத்துள்ளார் நடிகர் சிலம்பரசன்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மதுரை அலங்காநல்லூரில் இரண்டு நாளாக பகல், இரவு என தொடர்ந்து போராட்டம் வலுத்து வருகின்றது. சென்னை மெரினாவிலும் இளைஞர்கள் போராடி வருகிறார்கள்.
இந்த போராட்டத்திற்கு திரைக்கலைஞர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஏற்கெனவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகர் சிம்பு, மீண்டும் போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறாரர்.
இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில், “ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான தடையை நீக்கும் வரை அதற்கான போராட்டம் தொடர வேண்டும். யாரும் பின்வாங்க கூடாது. சாலையில் இறங்கி போராடுவோம். நாம் யாரென்று காட்டுவோம்” என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

http://tamil.samayam.com/latest-news/state-news/simbu-calls-people-gather-streets-fight-jallikattu/articleshow/56639124.cms