சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், சட்டப்படியான நடவடிக்கைகளை சந்திக்க தயாராக இருக்கிறோம் என திமுக கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த தொழிற்சங்க தலைவர் சிஐடியு செளந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
6அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது. ஜனவரி 8ந்தேதி (நேற்று() முதல் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளன. இந்த போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 90 சதவிகிதம் அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் கூறி வந்தாலும், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் உள்பட பல அனுபவம் இல்லாத ஓட்டுநர்களைக்கொண்டு பேருந்துகள் இயக்குவதால் பல இடங்களில் விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில், இன்று வேலைக்கு வராத போக்குவரத்து தொழிலாளர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு மெமோ அனுப்பும் பணியை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்கள்மீது துறை ரீதியிலான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க தலைவர் சிஐடியு செளந்தரராஜன், தாங்கள் முன்வைத்த எந்தகோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை., அதற்கு நிதிச்சுமை என்பதை காரணமாக சொல்ல முடியாது, எங்களது கோரிக்கையில், எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று கூறியதுடன், பழைய ஓய்வூதியம் உள்பட எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை, ஆனால் மக்களை திசை திருப்பும் வகையில் அமைச்சர் பேசி வருகிறார் என்று குற்றம் சாட்டியதுடன், எங்களின் கோரிக்கை தொடர்பாக அரசிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்று கூறினார்.
மேலும், திமுக அரசு, முறையாக பயிற்சி பெறாதவர்களை வைத்து பேருந்துகள் இயக்கி வருகிறது என்று குற்றம் சாட்டியவர், இதனால் பல இடங்களில் விபத்துக்கள் ஏற்பட்டு உள்ளனர். இதுமட்டுமின்றி போதிய பேருந்து இல்லாததால், அனைத்து பேருந்துநிலையங்களிலும் கூட்டம் கூட்டமாக பயணிகள் காத்திருக்கின்றனர் என்றவர், அமைச்சரின் மிரட்டல் மற்றும் சட்டப்படியான நடவடிக்கைகளை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்! சென்னையில் பரபரப்பு…