டெலகாம் துறையில் போட்டியாளர்களாக இருந்த அண்ணன் தம்பிகளான முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை அனில் அம்பானி வெளியிட்டுள்ளார்.

ambu

ஆர்காம் நிறுவனம் அனில் அம்பானி தலைமையிலும், ஜியோ நிறுவனம் முகேஷ் அம்பானி தலைமையிலும் செயல்பட்டு வந்தது. தற்போது இருநிறுவனங்களும் பரஸ்பர ஒத்துழைப்புடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளன. 100 மில்லியன் வாடிக்கையாளர்களுக்காகவும், 1 மில்லியன் விற்பனை பிரதிநிதிகளுக்காகவும், நமது பணியாளர்களின் நன்மைக்காகவும் இரு நிறுவனங்களும் இணைந்து பணியாற்றும் என்று அவர் குறிப்பிட்டார்
இதன் மூலம் அலைக்கற்றை, நெட்வொர்க், செல்போன் கோபுரங்கள், ஃபைபர் போன்ற அனைத்தையும் இரு நிறுவனங்களும் பகிர்ந்து கொள்ளும். சகோதரர்கள் இருவரும் வெவ்வேறு அமைப்பின் பெயரில் இயங்கினாலும் இருவரும் ஒன்றாக தங்கள் தந்தை திருபாய் அம்பானியின் கனவை நனவாக்குவோம் என்றும் அவர் கூறினார்.
இந்த இணைப்பு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்திருப்பதாக ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியும் கருத்து தெரிவித்துள்ளார்.