சார்க் மாநாடு: மோடி கலந்துகொள்ளவில்லை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Must read

 இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நடைபெற இருக்கும் சார்க் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ளமாட்டார் என இந்தியஅரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
sarrk-modi
பாகிஸ்தான் தீவிரவாத கொள்கைகளை மாற்றிக்கொள்ளாத வரை பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்காது என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் உரி பகுதியில் நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து இந்தியாபல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஐநா பொதுக்குழுவில் பாகிஸ்தானை சர்வதேச சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை இந்தியா செய்து வருகிறது. பெரும்பாலான நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் என்று பாகிஸ்தான் நம்பியிருந்த வேளையில் சீனாவும் பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பதை உறுதி செய்யவில்லை. இதில் பாகிஸ்தான் அதிர்ச்சியடைந்துள்ளது.
இந்நிலையில் வரும் நவம்பர் மாதத்தில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடக்க உள்ள சார்க் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்ள மாட்டார் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்திடம் இந்த தகவலை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேபோல வங்காளதேசமும் சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என அறிவித்து உள்ளது.
மேலும், ஆப்கானிஸ்தான் மற்றும் பூடான் நாடுகளும் இஸ்லாமாபாத் சார்க் மாநாட்டை புறக்கணிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால்,சார்க் மாநாடு சுமுகமாக நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

More articles

Latest article