ரிசர்வ் வங்கி மத்தியஅரசுக்கு ஈவுதொகையாக ரூ.30,307 கோடி ஈவுத்தொகை வழங்க முடிவு….

Must read

மும்பை: மத்திய அரசுக்கு 2021-22ம் ஆண்டுகான ஈவுத்தொகை ரூ.30,307 கோடி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை ஈடுசெய்ய சந்தையில் ரூ.30,000 கோடி பணப்புழக்கத்தை செலுத்த உள்ளது ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்த நிலையில், தற்போது ரூ.30 கோடி வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கியின் 596 வது மத்திய இயக்குநர்கள் குழு கூட்டம் மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இந்தியவின் தற்போதைய பொருளாதார நிலை, உலகளாவிய உள்நாட்டு சவால்கள் முதல் புவிசார் அரசியல் தாக்கங்களின் தாக்கம் வரை விவாதிக்கப்பட்டது. மேலும், ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை, ரிசர்வ் வங்கியின் செயல்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து,   2021-22-ஆம் நிதியாண்டுக்கான ஈவுத்தொகையாக ரூ.30,307 கோடி நிதியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தமுறை ஜூலை 2020 – மார்ச் 2021 காலத்திற்கான ஈவுத்தொகையாக ரூ.99,122 கோடியை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்கியிருந்தது  இதையடுத்து,  ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்தியஅரசு  ரூ. 73,948 கோடி ஈவுத்தொகை பெற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. இந்த நிலையில், ஈவுத்தொகையாக ரூ.30,307 கோடி நிதியை மத்திய அரசுக்கு வழங்க ஆர்பிஐ முடிவு செய்துள்ளது.

More articles

Latest article