அதானி நிறுவன பங்குகள் இன்றும் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள இந்திய வங்கிகள் சந்தித்துள்ள நஷ்டம் குறித்த விவரங்களை ஆர்.பி.ஐ. கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதானி நிறுவன பங்குப் பத்திரங்களுக்கு எந்த ஒரு மதிப்பும் இல்லை அது பூஜ்யமாகி விட்டதாக ஸ்விட்ஸர்லாந்து நிதி மேலாண்மை நிறுவனம் கிரெடிட் சுவிஸ் தெரிவித்துள்ளதாக நேற்று செய்தி வெளியானது. மேலும், அதானி நிறுவன பங்குப் பத்திரங்களுக்கு ஈடாக கடன் வழங்கவேண்டாம் என்றும் பரிந்துரைத்துள்ளது.

கிரெடிட் சுவிஸ் நிறுவனத்தின் இந்த பரிந்துரையை அடுத்து சிட்டி குரூப் நிதி மற்றும் வங்கித் துறை நிறுவனம் அதானி நிறுவன பங்கு பத்திரங்கள் மீது கடன் வழங்குவதை இன்று முதல் நிறுத்தி வைத்துள்ளது.

இதனை அடுத்து டீலில் விடப்பட்ட அதானி, புதிதாக வெளியிட்ட அதானி என்டர்ப்ரைசஸ் நிறுவன பங்குகளை திரும்பப் பெற்றதுடன் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்பத் தரப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், அதானி குழும நிறுவனங்களில் வங்கிகள் செய்திருக்கும் முதலீடு குறித்த தகவல்கள் பெறப்படுவதன் மூலம் அதானி நிறுவன விவகாரத்தில் மத்திய அரசு எந்தவித பாரபட்சமும் பார்க்கவில்லை என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளையில், இந்த ஆய்வுகளின் முடிவை வைத்தே இது அதானியை சுத்தப்படுத்த எடுக்கப்பட்ட முடிவா என்பது தெரியவரும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அதானி நிறுவன பங்குகள் வாபஸ்… நூலறுந்த பட்டமாக அதானி