டெல்லி: அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆம் ஆத்மி, பி. ஆர். எஸ். கட்சிகள் சார்பில் நோட்டீஸ் வழங்கி உள்ளது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் டிசம்பர் 31ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றுமுதல் விவாதங்கள் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், ஹிண்டன்பெர் நிறுவன அறிக்கை காரணமாக, பெரும் சரிவை சந்தித்துள்ள பிரதமர் மோடியின் நண்பர் அதானி நிறுவனத்தின் பங்குச்சந்தை மோசடி குறித்து விவாதம் நடத்த காங்கிரஸ் கட்சி தலைவர் அதன் தலைவரும், ராஜ்யசபா தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, ஆம் ஆத்மி, பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்துள்ளது. அவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு, இதுகுறித்து விவாதம் நடத்தக்கோரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
அதுபோல, சீனாவுடனான எல்லை நிலவரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தார்.