டெல்லி:

பணமதிப்பிழப்பை கடந்த நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இந்திய மக்கள் தங்களிடம் இரு ந்த பழைய ரூ. 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கடந்த டிசம்பர் 30ம் தேதி வரை மாற்றிக்     கொள்ள அவகாசம் அளித்தது.

அதன் பிறகு பணமதிப்பிழப்பு  அமலில் இருந்த 50 நாட்களில் வெளிநாடுகளில் இருந்த இந்தியர்கள்  பழைய ரூ. 500, 1000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ள நேற்று வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.  இவர்கள் பணம் டெபாசிட் செய்ய வரையறை நிர்ணயம் செய்யப்படவில்லை.

அதே சமயம் வெளிநாடுவாழ் இந்தியர்கள் வரும் ஜூன் 30ம் தேதி வரை மாற்றிக் கொள்ள அவகாசம்  வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இவர்களுக்கு வெளிநாட்டு பரிமாற்ற நிர்வாகச் சட்டப்படி ஒரு நபர் ரூ. 25  ஆயிரம் வரை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்.

நேற்று கெடு முடிந்த பின் வெளிநாட்டில் இருந்து திரும்பிய இந்தியர்கள் பலரும் கையில் இருந்த பணத்தை  மாற்ற முடியாமல் நீண்ட நேரம் ரிசர்வ் வங்கி கிளை வாசல்களில் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்  சென்றனர்.

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது        ராஜ்யசபாவில் பேசுகையில், ‘‘மும்பை மற்றும் டெல்லி ரிசர்வ் வங்கி கிளைகளில் நீண்ட வரிசையில் மக்கள்  காத்திருக்கின்றனர். அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் இங்கு வருவதால் தான் வரிசை  நீண்டு காணப்படுகிறது. பல ஊழியர்கள் பிரத்யேகமாக நியமனம் செய்யப்பட்டு அதிக எண்ணிக்கையிலான  கவுன்டர்களில் பணம் பெறப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தார்.

இந்த அறிவிப்பும் உச்சநீதிமன்ற கிடுக்கிப்பிடிக்கு பிறகே வெளியிடப்பட்டது. ‘‘ஏன் பிரதமர் உறுதி  அளித்தப்படி மக்கள் தங்களது செல்லாத பணத்தை மாற்றிக் கொள்ள மார்ச் 30ம் தேதி வரை அனுமதி க்கப்படவில்லை’’ என்று  உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

மேலும் நேற்று முதல் வருமான வரித்துறை விதிகளை  மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. அதில்,  ‘‘கடந்த நவம்பர் 8ம் தேதிக்கு பிறகு ரூ. 2 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்யட்டவை கணக்கில் எடுத்துக்  கொள்ளப்படும். அதேபோல் சம்பளம், வீடு, வட்டி வருவாய் ஆகியவை மூலம் ரூ. 50 லட்சம் வரை வருவாய்  ஈட்டுபவர்கள் ஐடிஆர்&1 சகாஜ் என்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தாக்கல் செய்ய வேண்டும்’’ என  அறிவிக்கப்பட்டுள்ளது.