கடனை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்கள், மோசடி கணக்குகள் வைத்திருந்தோர் வங்கிகளுடன் சமரச தீர்வுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

இவர்களுக்கு குறைந்தபட்சம் 12 மாதங்கள் கழித்து புதிய கடன்கள் வழங்கவும் ஆர்.பி.ஐ. தாராள மனதுடன் அனுமதித்திருக்கிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) சுற்றறிக்கையின்படி, வங்கிக் கடனை வேண்டுமென்றேத் திருப்பிச் செலுத்தாதவர்கள் மற்றும் மோசடி என குறிப்பிடப்படும் கணக்குகளுக்கு உறுதிமொழி தீர்வை மேற்கொள்ளலாம்.

குற்றவியல் நடவடிக்கை அல்லது சமரச தீர்வு நடந்துகொண்டிருக்கும் கடனாளிகளுடன் வங்கியால் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது, அத்தகைய சமரசம் முன்கூட்டியே நிலுவைத் தொகையை மீட்டெடுப்பதில் மட்டுமல்லாமல் சட்ட செலவு உள்ளிட்ட பல்வேறு செலவையும் மிச்சப்படுத்துகிறது.

“வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் மற்றும் மோசடி நிறுவனங்களுக்கு சமரச தீர்வுக்கு ஆர்பிஐ ஒப்புதல் அளித்தது ஒரு தந்திரமான சூழ்நிலைக்கு வழிவகுக்கும்.

வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்த மறுக்கும் கடனாளியால் இந்த செயல்பாட்டில் அதிக பொதுப் பணம் இழக்கும் வாய்ப்பு உள்ளது” என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தவிர, இந்த ரைட்- ஆஃப்களுக்கு 12 மாதங்கள் கழித்து இவர்களுக்கு புதிய கடன்கள் பெற வகை செய்திருப்பது வங்கிகளுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.