நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றிப்பெற்ற இந்தியா தொடரையும் வென்று வரலாற்று சாதனை புரிந்துள்ளது. அபாரமாக விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் வித்யாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வென்றது.

india

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இதற்கு முன்பு நடைபெற்ற முதல் மற்றும் 2வது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்ற இந்தியா 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதனை தொடர்ந்து இரு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டியில் விஜய் சங்கருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவும், தோனிக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கும் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். வழக்கம் போல் இந்திய அணி வீரர்கள் அதிரடியாக பந்து வீசியதால் ஆஸ்திரேலிய வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் திணறினர். ஆஸ்திரேலிய அணி 59 ரன்கள் எடுப்பதற்குள் 3விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரரான முன்ரோ 7 ரன்களிலும், குல்தீப் 13ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அந்த அணியின் கேப்டன் வில்லியம்சம் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதனால் அந்த அணி 25 ஓவர்களில் 100ரன்களை மட்டுமே எட்டியது. இருப்பினும் அந்த அணியின் டெய்லர் மற்றும் லாதம் அரைசதம் கடந்தனர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெய்லர் சதம் அடுக்கும் தருவாயில் ஷமியின் பந்து வீச்சில் 93 ரன்கள் எடுத்து ஆவுட்டாகினார். இறுதியாக நியூசிலாந்து அணி 49 ஓவர்களுக்கு 243ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இந்திய அணிக்கு 244 ரன்கள் வெற்றி இல்லாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் சார்பில் ஷமி 3விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், சாஹல், ஹர்திக் பாண்டியா தலா 2விக்கெட்டுகளை எடுத்தனர்.

sahl

இதனை தொடர்ந்து 244ரன்கள் எடுத்தால் வெற்றி என்ர இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க வீரர்களான ரோஹித் மற்றும் தவான் சிறப்பான ஆட்டத்டை வெளிப்படுத்தினர். தவான் 28ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ரோஹித் சர்மாவுடன் கேப்டன் கோலி இணை சேர்ந்தார். இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை வெற்றி நோக்கி எடுத்து சென்றனர்.

கோலி மற்றும் ரோஹித் அரைசதம் கடந்து 60 ரன்களிலும், 62 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து வந்த அம்பதி ராயுடு மற்றும் தினேஷ் கார்த்திக் இணை போட்டியின் தீவிரத்தை உணர்ந்து விளையாடினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இந்திய அணி 43 ஓவரில் 245ரன்கள் எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்தை 7விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்தது. ராயுடு 40 ரன்களிலும், கார்த்திக் 38 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என இந்தியா முன்னிலையில் உள்ளதுடன் தொடரையும் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது.