ரியோடிஜெனிரோ:
ரியோ ஒலிம்பிக்கின் மல்யுத்தப் போட்டிகள் நேற்று நடைபெற்றது.
இந்தியாவின் சார்பில் மல்யுத்தத்தில் 5 வீரர்கள், 3 வீராங்கனைகள் என மொத்தம் 8 பேர் களமிறங்கினர். அதில் ஆடவர் 74 கிலோ ஃப்ரீஸ்டைல் போட்டியில் நர்சிங் யாதவும், ஆடவர் 65 கிலோ ஃப்ரீஸ்டைல் போட்டியில் யோகேஷ்வர் தத்தும், ஆடவர் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் போட்டியில் சந்தீப் தோமரும் பங்கேற்கிறார்கள்.
கிரேக்கோ ரோமன் என்ற மல்யுத்தப் போட்டியில் இந்தியர்கள் முதல்முறையாக களமிறங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் ரவீந்தர் கேத்ரி 85 கிலோ எடைப் பிரிவிலும், ஹர்தீப் சிங் 95 கிலோ எடைப் பிரிவிலும் பங்கேற்கின்றனர். மகளிர் 48 கிலோ எடைப் பிரிவில் வினேஷ் போகத்தும், 53 கிலோ எடைப் பிரிவில் பபிதா குமாரியும், 58 கிலோ எடைப் பிரிவில் சாக்ஷி மாலிக்கும் களமிறங்குகின்றனர்.
ஆடவர் 85 கிலோ கிரேக்கோ ரோமன் தகுதிச்சுற்றில் ரவீந்தர் கேத்ரி ஹங்கேரியின் விக்டரிடம் மோதினார். இதில் கேத்ரி தோல்வி கண்டார்.