ரியோடிஜெனிரோ:
சீனாவை சேர்ந்த வீரர் ஒருவர் தனது சக வீரரான தோழியிடம் திருமண சம்மதம் கேட்ட நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
நேற்று நடைபெற்ற பெண்களுக்கான மூன்று மீட்டர் வளையும் மேடையிலிருந்து நீரில் தலைகீழாக குதிக்கும் போட்டியில் சீன வீரர் ஹெ ட்ஸீ வெள்ளிப்பதக்கத்தை வென்றார். அப்போது  அவரின் நண்பர் ஷின் கா பதக்க மேடைக்கு வந்து அவரை நெருங்கினார்.

மேடையில் மண்டியிட்டு ஹெ ட்ஸீயிடம்  ஒரு மோதிரத்தை கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தினனார்  ஷின் கா.
இதனால் அவரது தோழி வெட்கத்தில் தலை குனிந்தார்.  பின்னர் அவரின் காதலை ஏற்றுக்கொண்டார்.
 

ஆயிரக்ககணக்கில் கூடியிருந்த பார்வையாளர்களுக்கு மத்தியில்  ஒரு பெண்ணிடம் காதலை தைரியமாகவும், நாகரிகமாகவும் வெளிப்படுத்திய விதம் அனைவருக்கும் வியப்பதை கொடுத்தது. இந்த காதல் சம்பவம் ஒலிம்பிக்கில்  பரபரப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.