சென்னை:  ஞாயிறு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு உள்ளதால், தமிழ்நாட்டில் நாளை (30ந்தேதி)வழக்கம்போல் ரேஷன் கடைகள்  செயல்படும் என்று உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதைத் தொடர்ந்து, பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழகஅரசு தளர்த்தி உள்ளது. அதன்படி, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்துசெய்யப்பட்டு உள்ளது.  இதனால் கடந்த 3 வாரமாக மூடப்பட்டிருந்த ரேஷன் கடைகள்,  தற்போது ஞாயிற்றுக்கிழமையான நாளை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு உள்ளதால், நாளை வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  ஞாயிறு அன்று தமிழகத்தில் ரேஷன் கடைகள் செயல்படும் பொது விநியோக திட்டத்தின்கீழ் வழக்கம் போல் செயல்படும். நாளை  ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் பெறுவதற்காக நியாயவிலை கடைகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக பிப்ரவரி 26-ஆம் தேதி நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.