சென்னை: ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு தொடர்பாக சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஆர்.ஏ புரம், வேப்பேரி, தேனாம்பேட்டை உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. பல வாகனங்களில் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் கரூரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை கரூரை சேர்ந்த செல்வராஜ் அரசு ஒப்பந்ததாரர் என சொல்லப்படும் நிலையில், ஜவுளி நிறுவனமும் நடத்தி வருகிறார். இவரது வீட்டுக்கு இன்று கதாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 பேர் மத்திய பாதுகாப்பு படை போலீசாருடன் வருகை தந்து, காலை 7.30 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
செல்வராஜ் சோதனை ரேஷன் பொருள் விநியோக முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[youtube-feed feed=1]