நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 4 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால், அரசு மருத்துவமனைக்குள் தண்ணீர் குளம் போல் தேங்கியதால் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளாகினர்.

ராசிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான புதுப்பாளையம், பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு கனழை பெய்தது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
ராசிபுரம் அரசு மருத்துவமனைக்குள் தண்ணீர் குளம் போல் தேங்கியதால் நோயாளிகளை வேறு இடத்திற்கு ஊழியர்கள் அழைத்து சென்றனர்.
பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் பாதிப்புக்கு உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒருவர் கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel