ராசிபுரம் குழந்தைகள் விற்பனை: நர்ஸ் அமுதா சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்

Must read

சேலம்:

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஓய்வுபெற்ற நர்ஸ் அமுதவள்ளியின் சகோதரர் நந்தகுமார் சரணடைந்தார். அவரை காவலில் எடுக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டு காலத்தில் பிறந்த சுமார் 260 குழந்தைகள் சட்டவிரோதமாக விற்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் கிளம்பி இருப்பதால் சிபிசிஐடி காவல்துறையினர் அந்தக் குழந்தைகளின் விவரங்களைக் கண்டுபிடிக்க முழுமூச்சாக விசாரணைகளைத் தொடங்கி இருக்கிறார்கள்.


நாமக்கல் மாவட்டம் ராசிபுரத் தில் பிறந்த ஏராளமான குழந்தை கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக அண்மையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளி யானதை அடுத்து இந்த விவகாரம் சிபிசிஐடி விசாரணையிடம் ஒப் படைக்கப்பட்டது.  இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 9 பேர்  கைது செய்யப்பட்ட நிலையில், பெங்களூரில் ரேகா என்ற இடைத்தரகர் பிடிபட்டார். அவர் நேற்று நாமக்கல் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

கைதானவர்களிடம் நடத்தப் பட்ட விசாரணையைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளை அதிகாரிகள் கணக்கெடுத்தனர்.  நாமக்கல் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 4,300 குழந்தைகள் பிறந்து இருப்பதும் அவற்றில் 260 குழந்தைகளின் நிலை என்ன என்பது தெரிய வில்லை என்றும் அந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சிபிசிஐடி போலிசிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்கள்.

260 குழந்தைகளின் விவரங் கள் தெரியாமல் போயிருப்பதால் அவை விற்கப்பட்டு இருக்கலாம் என்று சிபிசிஐடி அதிகாரிகளுக் குச் சந்தேகம் எழுந்து இருக்கிறது.

இந்நிலையில், அந்த 260 குழந் தைகளின் பெற்றோர்களுக்குச் சொந்தமான முகவரிகளை வைத் துக்கொண்டு சிபிசிஐடி காவல்துறையினர் நாமக்கல் மாவட்டம் முழுவதும் விசாரணையை வேகப்படுத்தி இருப்பதாகத் தகவல்கள் கூறின.  இந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நர்ஸ் அமுதாவின் சகோதரர் நந்தகுமார் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதையடுத்து அவரை கைது செய்த சிபிசிஐடி காவல்துறையினர், அவரை போலீஸ் காவலில் எடுக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

More articles

Latest article