ராசிபலன்: 8.7.2022 முதல் 14.7.2022 வரை! வேதாகோபாலன்

Must read

மேஷம்

தொழில்துறைகள் முன்னேற்றமடையும். பண வரவு அதிகரிக்கும். ஆன்லைன் வர்த்தகங்களில் ஆர்வமுடன் ஈடுபடுவீங்க. குடும்பத்துல தேவையில்லாத சிக்கலை உண்டாக்காதீங்க. சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைத்து தேவையைப் பூர்த்தி செய்யும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். ஆனால், கடன்கள் விஷயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது அவசியம். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரி யம் அனுகூலமாக முடியும். பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும். தந்தை வழி உறவினர்களுடன் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். வீட்டில் பராமரிப்புப் பணிகளின் காரணமாக உடல் அசதி உண்டாகும். அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

சந்திராஷ்டமம் – ஜூலை 9  முதல் ஜூலை 12 வரை சந்திராஷ்டம தினங்களில்  பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்கவும்.

 ரிஷபம்

தொழில் அல்லது பணியில், போட்டிகளை துவம்சம் செய்ய தொடை தட்டி நிற்பீங்க. வியாபாரத்திற்குத் தேவையான முதலீடுகளை நன்கு யோசித்து விவேகமாகச் செய்வீங்க. நினைத்த காரியத்தில் வெற்றி பெறுவீங்க. புதிய வேலை வாய்ப்புகள் வரும். எந்த விஷயத்திலும் நியாயம் தவறக் கூடாது என்று நினைப்பீங்க. கோபத்தைக் கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும். அறிவும் அருளும் உங்களுக்கு பக்க துணையாக இருக்கும். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீங்க.. குடும்பத்துல இத்தனைநாள் குறைந்திருந்த நிம்மதி மெல்ல மெல்ல மீளும். உறவினரிடையே பிணக்கு ஏற்படும். அவற்றைத் தீர்த்து வைத்து நிம்மதி ஏற்பட வழி செய்து வாழ்த்துப் பெறுவீங்க. சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீங்க. குடும்பத்துல திருமணத்துக்கு முயற்சி செய்துகொண்டிருந்தீர்களே அந்த வரன் வீடு தேடி வரும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் விடுமுறையில் செல்வதால், அவர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்க நேரிடும். அலுவலக விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது.

சந்திராஷ்டமம் – ஜூலை 12  முதல் ஜூலை 14 வரை சந்திராஷ்டம தினங்களில்  பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்கவும்.

மிதுனம்

நெருங்கியவர்களோ அல்லது நண்பர்களோ உங்களைப் பற்றிப் பாராட்டிப் பேசுவதைப் பற்றிப் பெருமிதமா உணர்வீங்க. தொழில் சம்பந்தமாக விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்க லேசா முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். பல வகைகளிலும் அனுகூலமான வாரம். பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். உடல்நலம் சீராகும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறு பாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்க விருப்பத்தின்படி நடந்துகொள்வாங்க. அவர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்புண்டு. எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்க முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப் பார்.

கடகம்

உங்க துணையுடன் இனிமையான நேரத்தை செலவிடுவீங்க. உங்களின் சிறப்பான செயல்பட்டால் உங்களை சுற்றியுள்ளவர்களைக் கவர முடியும். உத்தியோகத்தில் ஒரு சில விஷயத்திற்காக நீங்க விட்டுக் குடுக்க நேரிடலாம். தைரியமாய் அதைச் செய்ங்க. தேர்வு விஷயங்கள்ல முடிவு எதிர்பார்த்தபடியும் விரும்பியபடியும். எந்த ஒரு போட்டித் தேர்விலும் வெற்றி பெற அதிர்ஷ்டம் உதவும். முகராசி இந்த வாரம் எதையும் சாதிச்சுக் கொடுக்கும். எடுத்த விஷயங்களில் வெற்றி உண்டு.  பணியிடத்தில் அதிக வேலைப்பளு காரணமாக இந்த வாரம் வேலையை முடிக்க அதிக நேரம் ஆகலாம். ஆனாலும் பர்ஃபெக்டாவும் பெஸ்ட்டாவும் முடிச்சுப் பாராட்டுப் பெறுவீங்க. போதாதா? உங்க துணையுடனான உறவில் சந்தோஷம் ஏற்படும். குறிப்பாக விட்டுக் கொடுத்துப் போய் மற்றவர்களின் அன்புக்குப் பாத்திரமாவீங்க.

சிம்மம்

பணியிடத்தில் உங்களோட திறமை, செயல்பாடுகள் மூத்த அதிகாரிகளின் பாராட்டைப் பெற்றுத் தரும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்ளவும். படிப்புல நீங்க எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும் மற்றும் இலக்கை நெருங்கச் செய்யும். புதிய வேலைக்கு மாற வாய்ப்பு உண்டு. சில முக்கியமான வேலைகளுக்கு சாதகமான முடிவுக்காக நீங்க காத்திருந்தால், அது நிறைவேற வாய்ப்புள்ளது. பணம் தொடர்பான விஷயங்களில் மனவருத்தத்தை தந்து நற்பலன் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்துல நெருங்கியவர்களுடன் நேரத்தை செலவிடுவீங்க. நிதி தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு சாதகமானதாகவும், சிலரின் உதவியும் கிடைக்கும். உணவு பழக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் உங்க ஆரோக்கியத்தை சிறப்பாய்ப் பராமரிப்பீங்க. மன உறுதியால நினைச்சதைச் சாதிக்க முடியும்.

கன்னி

இந்த வாரம் நீங்க ரொம்பவும் ஆரோக்கியமாவும் உற்சாகமாவும் இருப்பீங்க. முயற்சிகள் வெற்றிகரமான பலனைத் தரும். புத்திசாலித்தனமாக செலவு செய்வீங்க. மேலும் சேமிப்பதில் கவனம் செலுத்துவீங்க என்பதால் பணம் தொடர்பான பிரச்சனைகள் இருக்காது. இந்த வாரம் உங்க துணை ஒங்களுக்கு அன்பையும் அரவணைப்பையும் தருவார். இந்த வாரம் உங்களுக்கு   ரொம்பவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். அலுவலகத்துல உங்களுக்குன்னு தனி செல்வாக்கை உருவாக்கிக்க முடியும். பணியிடத்தில் கிடைத்த வெற்றியின் காரணமாக உங்களைப் பற்றி நீங்க பெருமைப்படுவீங்க. மத்தவங்க கிட்டயும் பாராட்டுக் கெடைக்கும். ஏற்ற இறக்கமான வாரமாக இருக்கும். பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் இந்த வாரம் பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய வேண்டும், ஏனெனில் இந்த வாரம் உழைப்பு மட்டுமே நல்ல ஊதியம் கொடுக்கும். குருட்டு அதிர்ஷ்டத்தை நம்பாதீங்க.

துலாம்

எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுங்க. தொழிலில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பணியிடத்துல உங்க முயற்சிகளுக்கான பலன் கிடைக்கத் தாமதமாகலாம். தட்ஸ் ஆல் ரைட். முடிவில் சக்ஸஸ்தான். பிற்காலத்தில் வரக்கூடிய பிரச்னைகளையும் நீங்க முயற்சி செய்யும் செயலின் நன்மை, தீமையை ஆராய்ந்து செயல்படுவீங்க. இதனால சிரமங்களும் நஷ்டங்களும் குறையும். குடும்பப் பொறுப்பை முன்னெடுத்துச் செய்து பாராட்டு வாங்குவீங்க. எஸ்பெஷலி உங்க ஹஸ்பெண்ட் / ஒய்ஃப் பாராட்டுவாங்க.  உங்களுக்கான வேலைகளை கண்ணும் கருத்துமாக செய்து முடிச்சு ஹப்பாடான்னு நிம்மதியாவீங்க. காதல் வெவகாரத்துல இருந்துக்கிட்டிருந்த பிராப்ளம் நீங்கி நிம்மதி தரும். கல்வி தொடர்பான விஷயங்களில் நல்ல வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது .

விருச்சிகம்

எப்போதும் இளமையாக ஜொலிப்பீங்க. எந்த செயலையும் ஒரு நம்பிக்கை மற்றும் உறுதியோடு செய்வீங்க.   பணியிடத்தில் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டு வரவிருக்கும் பிரச்னைகளிலிருந்து முழுமையாய்த் தப்புவீங்க. உங்க சில நியாயமான பிடிவாதமான செயல்பாடு நல்ல விஷயங்களைச் சாதிச்சுக் குடுக்கும். தொழில் ரீதியாக சிறப்பான முன்னேற்றத்தைப் பெற வாய்ப்பு இருக்கு. அதிர்ஷ்டத்தின் ஆதரவால் எல்லா வேலைங்களும் வெற்றி பெறும். இந்த வாரம் உங்க ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வீங்க. வருமுன் காத்து நிம்மதி பெறுவீங்க. குடும்பத்துல மகிழ்ச்சி, நிம்மதி கிடைக்க துணையை மதிச்சு அவருக்கு நேரத்தை செலவழிச்சு ஹாப்பி ஆக்கிடுவீங்க. உங்களைவிடத் தாழ்ந்தவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். கலகலப்பான வாரமா அமைஞ்சு நிம்மதி தரும்.

தனுசு

இந்த வாரம் பழைய நண்பர்கள் அக்கம்பக்கத்தினரைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன, இது எதிர்காலத்தில் நெட்வொர்க்கிங்கிற்கு உதவியாக இருக்கும். அலுவலகத்தைப் பொருத்த வரை சில வேலைகள் குறிப்பிட்ட நேரத்தில் முடியாது என தெரிந்தால் அதை முன்னெடுத்துச் செல்லாதீங்க. வெளிப்படையாகக் கூறுங்கள். சில விஷயங்களால் காதல் விவகாரங்களில் உற்சாகமான மன நிலை ஏற்படும். உங்க துணையுடன் அன்பான நேரத்தை செலவிடுவீங்க. சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வீங்க. எந்த ஒரு செயலிலும் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். பக்குவமான முறையில் யோசித்து அவசரம் இல்லாமல் எதிலும் இறங்குங்க. உடல் நலனில் அக்கறை செலுத்துங்க. கல்வியில் கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். அதனால் பரவாயில்லை. படிப்பு தொடர்பான சூழ்நிலை சாதகமாக இருக்கும்.

மகரம்

இந்த வாரம் நீங்க ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது வழக்கமான உடற்பயிற்சியைச் செய்யலாம். பணியிடத்தில் இந்த வாரம் உங்க மீது சிலரின் அக்கறை மனநிலையில் இருப்பாங்க. காதல் விஷயங்களில் இந்த வாரம் சாதகமாக இருக்கும். முன்பைவிட உங்க துணையுடன் நெருக்கமாக இருப்பீங்க. பணம் தொடர்பான விஷயங்களில் இந்த வாரம் நீங்க சேமிப்பு மனநிலையில் இருப்பீங்க. தேவையற்ற செலவுகளைக் குறைக்க முயல்வீங்க. இந்த வாரம் இல்லத்தரசிகள் வீட்டை ஒழுங்குபடுத்த நினைத்து எழிலாக வெற்றி பெறுவீங்க.   இலக்கை அடைவதில் யாராவது உங்களுக்கு தடைகளை உருவாக்கினாலும் அதை அநாயாசமாக உடைத்தெறிந்து சினிமாக் கதாநாயகன் மாதிரி சிரித்து நகர்வீங்க. எனவே புத்திசாலித்தனமாக இருப்பீங்க. பரபரப்பான சந்தோஷத் தகவல்கள் கெடைக்கும்.

கும்பம்

சிறிய தொடக்கம் பெரிய லாபமாக மாறும். அதனால் முயற்சியைக் கைவிட வேண்டாம். காதல் விவகாரங்களுக்கு சாதகமான நேரம். உங்களின் பேச்சு, செயலால் யாரோ ஒருவர் உங்களை நோக்கி ஈர்க்கப்படலாம் மற்றும் உங்களுக்கு நேர்மறையான சமிக்ஞைகளை வழங்கலாம். பயணம் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். வெளியூர், வெளிநாடு என புதிய இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். காதல் விஷயங்களில் சற்றே பொறுமையுடன் இருக்கவும். ஆரோக்கியம் தொடர்பான எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உணவைக் கட்டுப்படுத்துவது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பழைய பயங்கள் மெல்ல விலகும்படியான சம்பவங்கள் நிகழும். சந்தோஷப் பொழுது போக்கு உண்டு.

மீனம்

இந்த வாரம் குடும்பத்துல ஒருவரின் வெற்றியால் பெருமிதம் கொள்வாங்க. உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். இந்த வாரம் பணியிடத்தில் சுறுசுறுப்பாகச் செயல்படுவதன் மூலம் காரியங்களை சிறப்பாகவும், சீராக செய்து முடிப்பீங்க. இந்த வாரம் வேலையில் சற்று ஓய்வு கிடைக்கும். விடுமுறையில் எங்காவது செல்ல திட்டமிடுவீங்க. வீட்டை புதுப்பிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்க வாழ்க்கை துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எனவே இந்த வாரம் உங்க துணையுடன் அனுசரித்துச் செல்லவும். எதிலும் வெற்றி பெற, நீங்க முன் வந்து விஷயங்களைக் கையாள வேண்டும். உடல் எடையை குறைக்க நீங்க எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். சில நல்ல வேலைகளுக்காக செலவழித்த பணத்திற்கு நல்ல பலன் கிடைக்கும். குழந்தைகள் வாழ்வில் நல்ல செய்தி வரும். குடும்பம் மகிழ்வதால் நீங்க மகிழ்வீங்க.

சந்திராஷ்டமம் – ஜூலை 7  முதல் ஜூலை 9 வரை சந்திராஷ்டம தினங்களில்  பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்கவும்.

More articles

Latest article