கென்யாவில் உள்ள சம்புரு தேசிய சரணாலயத்தில் யானை ஒன்று இரட்டை கன்று ஈன்றுள்ளது.
100 ல் ஒரு யானை மட்டுமே இரட்டை கன்றுகளை பிரசவிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த அரிய வகை கன்றுகளை பெற்றெடுத்த தாய் யானையின் பெயர் போரா என்றும் குட்டிகளுக்கு தேவையான பாலை தாய்யானை கொடுத்துவருவதாகவும் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று ஜனவரி 20 ம் தேதி இந்த யானை குட்டிகளை பார்த்ததாகவும் அடுத்த சில நாட்கள் அந்த இளம் யானைகளுக்கு தேவையான ஊட்டம் தடையில்லாமல் கிடைக்கவேண்டும் என்றும் கூறினர்.
இதற்கு முன் 2006 ம் ஆண்டு இதேபோன்று இரட்டை கன்றுகளை ஈன்ற நிலையில், அவற்றுக்கு தேவையான பால் கிடைக்காததால் ஒரு சில தினங்களில் இறந்து போனதாக வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
[youtube-feed feed=1]