காதலுக்காக….. இதயத்திற்கு பதில் கிட்னி-யை பறிகொடுத்த இளைஞர்…

Must read

காதலுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன் என்று வாய்சவடால் விடும் நபர்கள் மத்தியில், காதலுக்காக கிட்னியை கொடுத்த சம்பவம் திடுக்கிட வைக்கிறது.

அதிகபட்சமாக காதலுக்காக நீங்கள் என்னவெல்லாம் செய்வீர்கள் ? என்று இணையத்தில் ஒருவர் வேடிக்கையாக கேட்க அதற்கு பலரும் பலவித பதில்களை அனுப்பி இருந்தனர்.

மெக்ஸிகோ நாட்டின் பஜா கலிபோர்னியா என்ற இடத்தைச் சேர்ந்த உஜியல் மார்ட்டினெஸ் என்ற ஆசிரியர் அனுப்பிய பதில் அனைவரையும் திடுக்கிட வைத்தது.

அவர் அனுப்பிய டிக்-டாக் வீடியோவில் தனது காதலிக்காக காதலியின் தாயாருக்கு கிட்னியை தானமாக கொடுத்ததாக பதிவிட்டிருந்தார்.

மேலும், கிட்னி கொடுத்த அடுத்த மாதமே அந்தப் பெண் தன்னை பிரிந்து வேறுஒருவரை திருமணம் செய்து சென்று விட்டார் என்று அவர் கூறியதைக் கேட்டு பலரும் அவருக்கு ஆறுதல் கூறினர்.

மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்ட அவர் தான் இதை விளம்பரத்திற்காக சொல்லவில்லை என்றும் தான் வெளியிட்ட வீடியோ இந்தளவிற்கு பகிரப்படும் என்று நினைக்கவில்லை என்றும் கூறிய அவர், “எங்கிருந்தாலும் வாழ்க” ரேஞ்சுக்கு தனது முன்னாள் காதலியை வாழ்த்தினார்.

அதற்கு. “இப்போது உங்களுக்கு உள்ளது ஒரே ஒரு கிட்னி அதனால் தவறுதலாக கூட மீண்டும் இதுபோல் செய்யாதீர்கள்” என்று அவருக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.

More articles

Latest article