தஞ்சை :

 

ஞ்சை பெரிய கோயில் எனும் ராஜராஜேச்சரம் ராஜா ராஜா சோழனின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் உன்னத கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டு.

கட்டிடக்கலை, சிற்பம் மற்றும் ஓவிய கலைகளுக்கு புகலிடமாக திகழ்ந்தது தஞ்சையை தலைமையிடமாக கொண்ட இடைக்கால சோழ சாம்ராஜ்யம் என்றால் மிகையாகாது.

இந்திய பெருங்கடல் பகுதி முழுவதும் தனது வீரத்தை நிலைநாட்டிய ராஜா ராஜா சோழன், தான் வணங்கும் தெய்வமான சிவபெருமானுக்கு பிரம்மாண்டமாய் கோவில் கட்ட நினைத்ததோடு நில்லாமல், அதனை உலகமே வியக்கும் வகையில் கட்டி இன்றளவும் தமிழர்க்கும் தமிழ்நாட்டிற்கும் அடையாளமாக இருக்கச்செய்தது நாம் பெருமைகொள்ள வேண்டிய ஒன்று.

 

தஞ்சை பெரிய கோவில் யுனெஸ்கோ உலக பாரம்பரியமிக்க தலமாக அறிவித்துள்ள இடமாகும், இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த கோயிலில் இன்று கும்பாபிஷேகம் இனிதே நிகழ்ந்தது.

மாமன்னன் ராஜராஜ சோழன் நிறுவிய ஆயிரம் ஆண்டுகளை கடந்து நிற்கும் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றிருக்கும் இந்த வேலையில், பெருவுடையார் கோயிலை பற்றிய பல அரிய பழைய புகைப்படங்களின் தொகுப்பு உங்களுக்காக.