சென்னை,பிப்.5

நாடாளுமன்ற மாநிலங்கவை உறுப்பினர்களாக  பதவி வகிக்கும் 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் வரும ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. இதன் காரணமாக புதிய எம்.பி.க்கள் தேர்தல் தொடர்பாக இந்த மாதம் இறுதியில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலங்களவையில் தமிழகத்தை சேர்ந்த 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து 6 புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க இந்த மாதம் இறுதிக்குள் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலங்களவையில் (ராஜ்ய சபா) மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, தொழில் போன்ற துறைகளில சிறந்து விளங்கும்  12 உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள். மீதமுள்ள எம்.பி.க்கள் அரசியல் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களால் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்… இந்த மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.

தமிழகத்தில் இருந்து  கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம்  6 எம்.பி.க்கள் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

1. திருச்சி சிவா (தி.மு.க.)

2. டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு)

3. சசிகலா புஷ்பா (அண்ணா.தி.மு.க.),தற்போது இவர் பாரதீய ஜனதாவில் இணைந்துள்ளார்.

4. விஜிலா சத்யானந்த் (அண்ணா.தி.மு.க.)

5. மேட்டுப்பாளையம் செல்வராஜ் (அண்ணா.தி.மு.க.)

6. முத்துகருப்பன் (அண்ணா.தி.மு.க.).

இவர்களின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதத்துடன்  நிறைவடைகிறது. இதனால் 6 புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க இந்த மாதம் அறிவிப்பு வெளியாக உள்ளது.

இதில் அண்ணா.தி.மு.க.வில் 3 எம்.பி.க்களும், தி.மு.க.வில் 3 எம்.பி.க்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் அதிமுகவுக்கு 4 எம்.பிக்கள் உள்ள நிலையில், தேர்தலுக்கு பிறகு 3 எம்.பி.க்கள் மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. திமுக கூட்டணிக்கு 1 எம்.பி.க்கள் அதிகம் கிடைக்கும்.