திருவனந்தபுரம் :

கேரளாவில் ‘பிளாஸ்மோடியம் ஓவல்’ என்று சொல்லப்படும் அரிய வகை மலேரியா காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

சூடான் நாட்டில் இருந்து தாயகம் திரும்பி வந்த ராணுவ வீரர் ஒருவருக்கு இந்த அரிய வகை காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனை அம்மாநில சுகாதார அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ராணுவ வீரருக்கு கண்ணூரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர்,

இந்த வகை காய்ச்சல் குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும், அறிகுறிகள் தென்பட்டவுடன் சிகிச்சை மேற்கொள்ளும் நபர்களுக்கு விரைவில் குணமடைந்து விடும் என்றும் தெரிவித்தார்.

பெரும்பாலும், ஆப்ரிக்க நாடுகளில் காணப்படும் என்றாலும் பிலிப்பைன்ஸ், நியூ கினியா போன்ற நாடுகளிலும் உள்ளது. இந்நோயால் உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை என்றாலும், ஆரம்பக்கட்டத்திலேயே சிகிச்சியளிக்க வேண்டும்.