காந்தி நகர்: கணவனே நடத்தினாலும் பாலியல் பலாத்காரம் என்பது பாலியல் பலாத்காரம்தான் என்று குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ராஜ்கோட்டை சேர்ந்த ஒரு பெண் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு கணவன் வீட்டில் வாழ வந்திருக்கிறார்.

சில நாட்களில் கணவன் வீட்டில் படுக்கை அறையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தம்பதியரின் நெருக்கமான உறவு படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ காட்சிகளை தொடர்ந்து ஆபாச தளங்களுக்கு விற்று பணமாக்கி வந்துள்ளனர்.

கணவன், மைத்துனர்கள் மற்றும் மாமியார் என குடும்பமே இதற்கு உடந்தையாக இருந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் செல்ல கணவன் மற்றும் மைத்துனர்கள் மற்றும் மாமியார் என அனைவரும் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கில் ஜாமீன் கோரிய மாமியார், மனைவி மீதான பாலியல் பலாத்காரம் என்பது கணவனை கட்டுப்படுத்தாது என்று வாதிட்டார். ஆனால் குஜராத் உயர்நீதிமன்றம் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

வழக்கை விசாரித்த நீதிபதி டி.ஏ.ஜோஷி, பாலியல் பலாத்காரம் என்று வரும்போது ஒரு ஆண், ஆண் தான். ஒரு பெண், பெண்தான். இதில் கணவனுக்கு விதிவிலக்கு என்றெல்லாம் பார்க்க முடியாது என்று தெரிவித்தார்.

376 ஆவது பிரிவான பலாத்கார குற்றம் கணவனுக்கும் பொருந்தும் என்றும் நீதிபதி கூறினார்.

50க்கும் மேற்பட்ட அமெரிக்க மாகாணங்கள் ஆஸ்திரேலியா நியூசிலாந்து கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கணவன் பலாத்காரம் செய்தாலும் அது குற்றமே என்பது நடைமுறையில் உள்ளது என்பது நீதிபதி சுட்டிக்காட்டினார்.