கொழும்பு

லங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடித்துள்ளார்.

தற்போது இலங்கை பிரதமராக் ரணில் விக்கிரமசிங்கே பதவியில் உள்ளார்.   முன்னாள் பிரதமர் ராஜபக்சே இவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை இலங்கை பாராளுமன்றத்தில் அளித்தார்.

இதற்கான வாக்கெடுப்பு நேற்று நடந்தது.   இந்த வாக்கெடுப்பில்  ரணில் விக்கிரம சிங்கேவுக்கு ஆதரவாக 122 வாக்குகள் பதிவானது.    அவர் மீது நம்பிக்கை இல்லை என 76 வாக்குகள் பதிவாகின.    வாக்கெடுப்பில் 26 உறுப்பினர்கள் கலந்துக் கொள்ளவில்லை.

அதை ஒட்டி ரணில் விக்கிரமசிங்கே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.