புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மத்தியஅரசு நியமித்த 3 எம்எல்ஏக்கள் பதவி காரணமாக அங்கு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. என்ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியின் முதல்வர் பதவிக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவானதால், வேறு வழியின்றி, பாஜகவின் நெருக்குதலுக்கு என்.ஆர்.ரங்கசாமி பணிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
30 தொகுதிகiளக் கொண்ட புதுவை சட்டமன்ற தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் -10 தொகுதிகளை கைப்பற்றியது. பாரதிய ஜனதா 6 தொகுதிகளை கைப்பற்றியது. இதற்கிடையில் மே 7ந்தேதி பதவி ஏற்றார். ஆனால், அவரால் அமைச்சரவை ஏற்படுத்த முடியாத சூழல் தொடர்ந்து வருகிறது. துணைமுதல்வர் உள்பட பல அமைச்சர் பதவிகள் கேட்டு பாஜக தொல்லைக்கொடுத்து வருவதால், அவரால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில், பாஜக 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக அறிவித்தது. இதனால் பாஜகவின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இதனால், ரங்கசாமியால் அமைச்சர்கள் நியமிப்பதில் சர்ச்சை உருவானது. மாநலி பாஜக சார்பில் துணை முதல்வர் உட்பட 3 அமைச்சர் பதவியை கேட்டு பேரம் பேசியதால் அமைச்சர்கள் பதவி ஏற்பு தாமதமானது. இது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே பலதர பேச்சுக்கள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், பாஜகவிடம் ரங்கசாமி மண்டியிட்டு விட்டதாக கூறப்படுகிறது. பாஜகவின் நெருக்குதலுக்கு அடிபணிந்து, சட்டமன்ற சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர் பதவிகளை பாஜகவுக்கு வழங்க ரங்கசாமி ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விரைவில் அமைச்சர்கள் பதவி ஏற்கும் சூழல் உருவாகியுள்ளது.
3 எம்எல்ஏக்கள் நியமனம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பணிந்து போவாரா அல்லது பலிகடாவாகப் போகிறாரா?
புதுச்சேரியில் பாஜகவுக்கு துணை முதல்வர் பதவி? என்.ஆர்.ரங்கசாமி நழுவல் பதில்…