ஹீரோவாக அறிமுகமாகிறார் நடிகர் ராணாவின் சகோதரர் அபிராம் டகுபதி…!

Must read

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ராணா டகுபதி பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகன் ஆவார். நடிகர் ராணாவுக்கு அபிராம் டகுபதி என்கிற சகோதரர் உள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் ராணா .

இந்நிலையில் நடிகர் ராணாவின் சகோதரர் அபிராம் பிரபல இயக்குனர் தேஜா இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . இப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார் அபிராம்.

மேலும் அபிராம் டகுபதியின் தந்தை சுரேஷ் பாபு தான் இப்படத்தை தயாரிக்க உள்ளார். கொரோனா பரவல் குறைந்த பின் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம்.

நடிகர் அபிராம் டகுபதி, ஸ்ரீ ரெட்டியின் மீ டூ புகாரில் சிக்கி பரபரப்பாக பேசப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

More articles

Latest article