சென்னை: நாளை (ஏப்ரல் 11ஆம் தேதி)  தமிழ்நாட்டில் ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு பொதுவிடுமுறை அறிவித்து உள்ளது.

நடப்பு ஆண்டுக்கான ரம்ஜான் நோன்பினை இஸ்லாமியர்கள் மார்ச் 12ஆம் தேதி முதல் கடைபிடித்து வந்தனர். 30 நாட்கள் நோன்பின் முடிவு நாளன்று, வானத்தில் பிறை தெரிவதை வைத்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி,   நேற்று ( ஏப்ரல் 9ந்தேதி)  பிறை ஏதும் தென்படாததால், ஏப்ரல் 11ஆம் தேதி தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இதையடுத்து, ஏப்ரல் 11ந்தேதி பொதுவிடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளி கல்லூரிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.