'பிக் பாஸ்' சீசன் 4 நிகழ்ச்சிக்கு செல்கிறாரா ரம்யா பாண்டியன்…!

Must read


‘டம்மி டப்பாசு’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்.
படங்களைத் தாண்டி, சமூக வலைதளத்தில் இவருடைய போட்டோ ஷூட்டுக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு.
இந்த கொரோனா ஊரடங்கால் இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார் ரம்யா பாண்டியன் .
அப்போது ரசிகர் ஒருவர் ‘பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போட்டியாளராகச் செல்ல உள்ளீர்களா’ என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ரம்யா பாண்டியன், “தெரியவில்லை, இன்னும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பிலிருந்து யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. அப்படித் தொடர்பு கொண்டால் தானே போக முடியும்” என பதிலளித்துள்ளார்.
கடந்த பிக்பாஸ் சீசனின் போதே ரம்யா பாண்டியன் பங்கேற்க ஆர்வம் காட்டி இருந்தார். ஆகையால், பிக்பாஸ் 4-வது சீசனில் ரம்யா பாண்டியனும் போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

Latest article