“இது ராம்குமார், சுவாதி இல்லை!” : பையனோட “அப்பா” சொல்றாரு!

Must read

நுங்கம்பாக்கம் சுவாதி மற்றும் ராம்குமார் ஆகியோரின் படம் என்று கடந்த இரு நாட்களாக சமூகவலைதளத்தில் வலம் வந்துகொண்டிருக்கும் படம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
9
இந்த நிலைியில் பரசுராம்  என்பவர் தனது முகநூல் பக்கத்தில், “இந்த புகைப்படத்தில் இருப்பது என் மகன் பிரதீப்பும் அவன் தோழியும். இடம் பாண்டிச்சேரி. இதை யாரோ சில விஷமிகள் ராம்குமார் – சுவாதி என்று  தவறாக பரப்பி வருகிறார்கள். இதை நம்ப வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.
சரிதான்.
 

"அப்பா" பிறந்தது 1988ல்..!
“அப்பா” பிறந்தது 1988ல்..!

ஆனால், ஒரு தகப்பனார் இப்படியோர் படத்தை பதிந்து, “இது என் மகனும்அவன் தோழியும்” என்பதை இத்தனை பப்ளிக்காக சொல்வாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அந்த முகநூல் பக்கத்தை புரட்டி(!) பார்த்தால், அந்த நபரின் பிறந்த நாள் 1988 ஜனவரி 1 என்று இருக்கிறது.  அதாவது அந்த “தகப்பனாருக்கு” தற்போது வயது 28. அவருக்கு படத்தில் இருக்கும் இருபத்தி சொச்ச வயதில் மகன்!
ஒன்னுமே புரியலை, ஓ மை காட்!

More articles

Latest article