சுவாதி கொலை  விவகாரத்தில் தேவையில்லாமல் சாதி, மதத்தை இழுத்தனர் சில பலர். இப்போது ஆடி காரில் போதையுடன் பயணித்து தொழிலாளியைக் கொன்ற ஐஸ்வர்யா விவகாரத்திலும் மதம் புகுந்திருக்கிறது.  “ஐஸ்வர்யா கிறித்தவர் என்பதால் பொய்வழக்கு போட்டிருக்கிறார்கள்” என்று சிலர் சமூக வலைதங்களில் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள்.
 
 
6
இதற்கு ஒரு உதாரணம், கிம்லவ்  (Kim Love) என்ற முகநூல் பதிவரின் பதிவு:
“ஐஸ்வர்யாவுக்கு நடந்த கொடுமை? “  என்ற தலைப்பில் இவர் எழுதியிருக்கும் பதிவைப் படித்துப் பாருங்கள்..
“ஐஸ்வர்யா சகோதரியின் பெற்றோர்கள் உழைப்பால் உயர்ந்தவர்கள்.
யாரையும் ஏமாற்றி பூஜை செய்து பிழைப்பு நடத்தாதவர்கள். கிறிஸ்தவர்கள் பணத்துடன் வாழ கூடாது என்ற குருகிய மனப்பான்மை கொண்ட தீவிரவாதிகள் திட்டமிட்டு சகோதரி மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே அடித்து கொலை செய்யப்பட்ட ஒருவரின் உடலை கொண்டு வந்து ஐஸ்வர்யா காரின் முன்பு வீசியெறிந்து தங்கள் பகையை தீர்த்து கொன்டார்கள்.
பணம் தான் உங்களுக்கு பிரச்சனை என்றால் அதை சகோதரியிடமே கேட்டு வாங்கிருக்கலாமே ? அதற்கு ஏன் அப்பாவி இந்து பைய்யனை ஏன் கொலை செய்ய வேண்டும்,
உங்கள் மத வெறி மற்றும் பண வெறிக்காக அப்பாவி இளைஞனை கொலையும் செய்து, ஒரு சிரு எரும்புக்கு கூட தீங்கு செய்யாத அந்த பெண்னையும் ஏன் கஷ்டப்படுத்தனும் ?
நீங்கள் நடத்தும் இந்த செயல்
அப்பாவி இந்துக்களை பாதிக்கிறதே தெரியவில்லையா ?”
#  இப்படி எதிலும் சாதி, மதத்தைப் புகுத்துபவர்களை என்ன செய்வது?