ராமேஸ்வரம்:
இந்தியாவில் ஓடும் அனைத்து நதிகளையும் இணைக்கக் கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தினர்.
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் ராமேஸ்வரம் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்தியாவில் ஓடும் அனைத்து நதிகளையும் இணைக்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.

தண்ணீர் பிரச்சனையில் தமிழகம் பெரும் பாதிப்படைகிறது. ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணை கட்டி தண்ணீரை தேக்கி வைக்கிறது. கர்நாடகா அரசு காவிரியில் சட்டப்படி திறந்துவிட வேண்டிய தண்ணீரை திறந்துவிட மறுக்கிறது கேரள அரசு, முல்லை பெரியாறில் தண்ணீரை தேக்கி சாகுபடியை எதிர்க்கிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டிய மத்திய மாநில அரசுகள் மெத்தனமாக இருப்பதை கண்டித்தும்,
இந்தியாவில் ஓடும் அனைத்து நதிகளை இணைக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்தார்.
போராட்டத்தில் அனைத்து வகையான விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிடப்பட்டது.
Patrikai.com official YouTube Channel