ராமேஸ்வரம்,

ல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கையின் தொடர் அட்டூழியம் காரணமாக மீனவர்கள் வேதனைக்குள்ளாகி உள்ளனர்.

ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மீனவர்கள் நேற்று முன்தினம் பொங்கல் கொண்டாடிய நிலையில் நேற்று வழக்கம்போல் மீன் பிடிக்க சென்றனர். சுமார் 500 படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்.

அவர்கள் பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் இலங்கை கடற்படையினர் வந்தனர். இதன் காரணமாக தமிழக மீனவர்கள் அந்த பகுதியில் இருந்து திரும்ப தொடங்கினர்.

அப்போது அந்த பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர், அவர்களை  எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேஸ்வரம் மண்டபம் பகுதியை  சேர்ந்த 16 மீனவர்களை 4 விசைப்படகுகளுடன் சிறைபிடித்து சென்ற னர்.  அவர்களை விசாரணைக்காக காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கை தமிழக மீனவர்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கி வருகிறது.