அதிகம் பேரால் பார்க்கப்பட்ட டிவி தொடர் என்ற உலக சாதனை படைத்தது ராமாயாணம்

Must read

புதுடில்லி:

திகம் பேரால் பார்க்கப்பட்ட டிவி தொடர் என்ற உலக சாதனையை ராம்நாத் சாகர்ஸ் ராமாயண் தொடர் படைத்ததுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக எபிசோடுகள் எடுக்காததால், பல டிவி சேனல்களும் தங்களது பழைய நாடகங்களை டிவி.,யில் ஒளிபரப்பின. தூர்தர்ஷனும், ராமயணம், மகாபாரத தொடர்களை கையில் எடுத்தது. 1987 – 1988ம் ஆண்டுகளில் தூர்தர்ஷனில் ஞாயிறு காலை ஒளிபரப்பான இத்தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற தொடர்கள். 55 நாடுகளில் 65 கோடி பேர், அந்த நேரத்தில் இந்த தொடர்களை பார்த்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம் நாட்டில் அதிகம் பார்த்த சேனலாக, இந்த ராமாயணம் மாறியுள்ளது.

தூர்தர்ஷன் மாறி உள்ளது. இதனை டிவி பார்வையாளர் ஆய்வு அமைப்பு (பி.ஏ.ஆர்.சி.,) தெரிவித்தது. குறிப்பாக காலையும், மாலையும் ஒளிபரப்பான ராமாயணத் தொடரை மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். இதனால் பார்வையாளர் சதவீதம் 40 ஆயிரம் சதவீத வளர்ச்சியை தூர்தர்ஷன் பெற்றுள்ளது. மேலும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மகாபாரதம், சக்திமான், புனியாத் தொடர்களையும் மக்கள் விரும்பி பார்த்துள்ளனர்.

அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தொடர் என்ற உலக சாதனையை ராம்நாத் சாகர்ஸ் ராமாயணத்தை 7.7 கோடி பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article