சென்னை: தமிழகத்தில் ரம்ஜான் நோன்பு நாளை (ஏப்ரல் 14ந்தேதி) தொடங்குவதாக அரசு தலைமை காஜி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்ரதை புனித மாதமாக கொண்டாடுகின்றனர். இந்த மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருந்து இறுதி நாளில் பிறை பார்த்து நோன்பை நிறைவு செய்கின்றனர். இதற்காக ஆண்டுதோறும் ரமலான் பிறைதொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள்.
ஏப்.12-ம் தேதி மாலைரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும்காணப்படவில்லை. ஆகையால்புதன்கிழமை (ஏப்.14) அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.