அயோத்தியை ஆண்ட அரசர் தசரதருக்கும் ராணி கோசலைக்கும் பிறந்த மகனே ராமபிரான் ஆவார். விஷ்ணு பகவானின் அவதாரமாக இந்துக்களால் நம்பப்படும் தெய்வீகத் தன்மை கொண்டவரும் அவரே. இராம நவமி (தேவநகரி) என்பது இராமபிரானின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு இந்துப் பண்டிகை ஆகும்.
- ஏப்ரல் முதல் வாரத்தில் ராம நவமி பலயிடங்களில் சிறப்பாக கொண்டாடப்படும். ஷிர்டியில் ஏப்ரல் 3, 4, 5 தேதிகளில் ராம நவமியை முன்னிட்டு பல ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
- ஏப்ரல் 3, 4, 5 மாலை 7:30 முதல் இரவு 10:30 மணி வரை சாய் நகர் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
- சாய் பக்தர்கள் ஆகந் பராயனில் கலந்து கொள்ள விரும்பினால், ஏப்ரல் 2 ஆம் தேதி மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை, சமாதி கோவிலிலுள்ள மேடையில் தங்கள் பெயரைக் கொடுக்க வேண்டும். அன்று மாலை 6 மணியளவில் குலுக்கல் முறையில் பெயர்கள் தேர்வு செய்யப்படும்.
- 4ஆம் தெதி நிகழ்ச்சி நடத்த விரும்பும் கலைஞர்கள், தங்கள் பெயரை முன்கூட்டியே அறிவிப்பு அறையில் கொடுக்கவும்
- இந்த மூன்று நாள் திருவிழாவின் போது, சத்தியநாராயணா பூஜை மற்றும் அபிஷேக பூஜை நடைபெறாது.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாபா கோவிலில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகள்.