6 பிரதமர்களுடன் பணியாற்றிய ராம் விலாஸ் பஸ்வான்

Must read

புதுடெல்லி:

6 பிரதமர்களுடன் பணியாற்றிய பெருமையை லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் பெற்றுள்ளார்.


பாஜக கூட்டணியில் லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் இருந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மத்திய அமைச்சராக பதவி ஏற்ற ராம் விலாஸ், 6 பிரதமர்களுடன் பங்காற்றியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராம் விலாஸ் பஸ்வான், கடந்த 1989& ம் ஆண்டு முதல் முறையாக அப்போதைய பிரதமர் வி.பி.சிங்குடன் பணியாற்றினார்.

அதன்பிறகு,தேவே கவுடா, ஐகே. குஜரால்,வாஜ்பாய் ஆகியோருடன் சில காலம் பணியாற்றியுள்ளார்.
பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றதன் அடிப்படையில் 6 பிரதமர்களுடன பணியாற்றிய பெருமையை ராம் விலாஸ் பஸ்வான் பெறுகிறார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article