சென்னை,
மிழக தலைமை செயரலாளக பதவி வகித்து வருபவர் ராம் மோகன் ராவ்.  அவரது வீடு மற்றும் அவரது மகன் வீடுகளில் இன்று அதிகாலை முதலே வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.
தலைமை செயலாளர் வீட்டில் சோதனை நடைபெற்று வருவது அரசு மற்றும்  அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழக வரலாற்றில் இதுபோன்றதொரு சம்பவம் இதுவரை நடைபெற்றதில்லை. தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது இந்த ரெய்டு.

ஆந்திராவை சேர்ந்தவர் ராமமோகன்ராவ். கடந்த 1985 வருட பேட்ஜை சேர்ந்தவர். ஆண்டு ஆண்டு (2017) பணி ஓய்வு பெறுகிறார்.
கடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றவுடன் ராவ் தலைமை செயலாளராக வருவார் என கணிக்கப்பட்டது.
அப்போது அவர், கூடுதல் தலைமை செயலாளர் என்ற அந்தஸ்தில், முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மை செயலாளராக பணியாற்றி வந்தார். ஜெயலலிதாவுக்கு பிடித்தமான அதிகாரிகளில் இவர் முதன்மையானவர்.
அதேபோல் ஜெயலலிதா முதல்வரானதும் ராமமோகன்ராவ் தலைமை செயலாளராக பதவி உயர்வு பெற்றார். இவர் நேர்மையான முறையில் தலைமை செயலாளர் பதவியை அடையவில்லை என்று இவர்மீது குற்றச்சாட்டு உண்டு.
இவருக்கு முன்பு 12 சீனியர் அதிகாரிகள் தலைமை செயலாளர் பதவிக்கான பட்டியலில் இருந்ததை  இருட்டிப்பு செய்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டியவர் என்பதால், தலைமை செயலாளர்  பதவியை இலகுவாக ராம்மோகன்ராவ் பிடித்துள்ளார்.
தாய்மொழி தெலுங்கை கொண்ட ராம்மோகன்ராவ்  கடந்த  ஜூன், 8ந் தேதி, தமிழக அரசின் தலைமை செயலாள ராக ராம்மோகன் ராவ்  நியமிக்கப்பட்டார்.  இவர், எம்.ஏ., பொருளியல், எம்.காம். காஸ்ட் அக்கவுண்டன்சி படித்தவர்.
ஏற்கனவே  தமிழக அரசில் பல துறைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். சமூக நலம், வீடு மற்றும் நகர மேம்பாடு,  ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன தலைமை செயல்அதிகாரி ஆகிய பொறுப்புக்களை வகித்தவர்.
இவர் இதுவரை  மத்திய அரசு பணிகளுக்கு சென்றதில்லை. பல மொழிகள் பேசும் திறன் படைத்த ராம்மோகன் ராவ்எ  2001 முதல், 2003 வரை குஜராத் கடல்சார் வாரிய துணை தலைவராக இருந்துள்ளார்.
குறுக்கு வழியில் உயர்ந்த பதவிக்கு வந்த  குறுகிய காலத்திலேயே சொத்துகளை குவித்து உள்ளதாக சக அதிகாரி கள் குற்றம் சாட்டி வந்தனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ரெட்டி சகோதரர்களின் ரெய்டின்போது இவர் பெயர் அடிபட்டது. தொடர்ந்து இன்று அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.