சென்னை,
மிழக தலைமை செயலர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது  தமிழகத்திற்கே தலைகுனிவு என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில், தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை என்பது தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது, ஊழல் முறைகேடுகள் மூலம் லாபம் பார்த்த ஆட்சியாளர்கள், அதிகாரிகள், ஆட்சியை ஆட்டி வைப்பவர்கள் உள்ளிட்டோர் தப்பி விடக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
eதமிழக அரசின் தலைமை செயலர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை அண்ணாநகர் மேற்கில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத முன்னுதாரணமாக தலைமை செயலர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. ஊழல், முறைகேடுகள் மூலம் லாபம் பார்த்த ஆட்சியாளர்கள் அதிகாரிகள் தப்பிவிட கூடாது என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அண்மையில் சேகர்ரெட்டி வீட்டில் நடந்த சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் தங்கம் பறிமுதல் செய்ததையும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சேகர் ரெட்டி வீட்டை தொடர்ந்து தலைமை செயலர் வீட்டில் தற்போது வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
வருமான வரித்துறை நடத்தும் சோதனை விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.