சென்னை,
லைமை செயலர் ராம் மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற ரெட்டியே காரணம் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே ரெட்டி வீடு மற்றும் குவாரிகளில்  நடைபெற்ற சோதனையில் பல கோடி ரூபாய்கள் , கிலோ கணக்கில் நகைகள்  கைப்பற்றப் பட்டது. சேகர்  ரெட்டியுடன் உள்ள தொடர்பு காரணமாகவே ராம் மோகன் ராவ் வீட்டிலும் தற்போது ரெய்டு நடைபெற்று வருகிறது என்று சொல்லப்படுகிறது.
தமிழக அரசின் தலைமை செயலர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை அண்ணாநகர் மேற்கில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் ஒரு தலைமை செயலர் வீடு சோதனைக்கு ஆளாவது இதுவே முதல் முறையாகும்.
கடந்த வாரம் நடைபெற்ற சோதனையின் போது, சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையிலேயே தலைமை செயலாளர் வீட்டில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருமான வரித்துறை சோதனைக்கு ஆளான சேகர் ரெட்டிக்கும், தலைமை செயலர் ராம மோகனராவுக்கும் தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருவரும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

மேலும் சேகர் ரெட்டிக்கு மணல் ஒப்பந்தம் கிடைக்க காரணமாக இருந்தவர் ராம மோகன ராவ் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதன் காரணமாகவே சேகர் ரெட்டி மணல் ஊழலில் கொடிகட்டி பறந்துள்ளார்.
இவர் தலைமை செயலாளர் பதவியை பிடிக்கவே தில்லாலங்கடி வேலை செய்தவர். அப்போதே அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டது.
அதற்கேற்றார்போல், தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளில் உள்ள மணல்களை விற்க ஆலோசனை கூறி, மணல் குவாரிகள் மூலம் கோடிகளை குவிக்கலாம் என்று அரசுக்கு அடித்தளமிட்டவர் ராம் மோகன் ராவ்.
1990-ம் ஆண்டுகளில் அன்றைய செங்கற்பட்டு மாவட்ட ஆட்சியராக ராம மோகனராவ் இருந்தார். மணல் எடுக்க அனுமதி தருவதன் மூலம் பணம் பெறலாம் என ஆட்சியாளர்களுக்கு சொல்லியவர் ராம மோகன ராவ்.
இவர்தான் மணல் குவாரிகள் மூலம் தமிழகத்தில் இருந்து, மணலை விலைக்கு விற்கும்  வியாபார பொருளாக்கி பல்லாயிரம் கோடி புரள செய்து, ஊழலுக்கு வித்திட்டவர் என்றும் கூறப்படுகிறது.
அவரை உடனடியாக பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் சக அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
Is confessions of Sekar reddy reason for IT raids at Tamil Nadu Chief Secretary’s premises ?? Is he responsible for sekar reddy getting sand quarrying licences ?