பெங்களூரு: கர்நாடக  மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உட்பட 8 பேர்   உள்பட 11 பேர் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள தட்டே ஹக்கலு ஆற்றில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் ஆற்றில்  மூழ்கி உயிரிழந்தனர். இவர்களில் ஏழு பேர் பெண்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சம்பவத்தின்போது, இந்த குடும்பத்தினர்,  ஆற்றில் நன்னீர் சிப்பிகளைச் சேகரித்துக்கொண்டிருந்தபோது, ​​திடீரென ஏற்பட்ட கடும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

சம்பவத்தன்று,  உத்தர கன்னட மாவட்டத்தின்  ஷிராலி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 14 பேர் சிப்பிகளைச் சேகரிப்பதற்காக ஆற்றுக்குள் இறங்கியிருந்த நிலையில், இரவில் பெய்த மழையின் காரணமாக ஆற்றில் நீர்வரத்து திடீரென அதிகரித்ததே இந்த விபத்திற்குக் காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் பட்கல் தாலுகாவில்  தட்டே ஹக்கலு ஆறு ஓடுகிறது. ஆற்றோரம் உள்ள கிராமங்களில் ஒன்று ஷிராளி.  இங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத் தொழில் ‘நன்னீர் சிப்பிகளை’ சேகரிப்பது ஆகும்.

இந்த நிலையில் ஒரே  ஊரைச்ச் சேர்ந்த 14 பேர் நேற்று ஆற்றுக்குள் இறங்கி, சிப்பிகளைத் தேடி ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது, திடீரென நீரின் வேகம் அதிகரித்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக ஒன்று அல்லது இரண்டு பேர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களைக் காப்பாற்றுவதற்காக மற்றவர்களும் ஆற்றில் குதித்தபோது, பலத்த நீரோட்டம் காரணமாக அவர்களும் நீரில் மூழ்கினர்.

தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர், போலீஸார் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் 7 பெண்கள் உட்பட 8 பேரின் உடல்கள்  மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

[youtube-feed feed=1]