அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் வரும் ஜனவரி 22ம் தேதி ராமர் சிலை நிறுவப்படுகிறது.
இந்த சிலை பிரதிஷ்டை விழாவிற்கு சங்கராச்சாரியார்கள், வைணவ கோயில் மடாதிபதிகள், சிவாச்சாரியார்கள், நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், அரசியல்கட்சியினர் உள்ளிட்ட சுமார் 6000 பேர் கலந்துகொள்ள அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
உ.பி. மாநில அரசு பணியாளர்கள் அனைவரும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உபி மற்றும் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள கர்பிணிப் பெண்கள் ஜனவரி 22ம் தேதி சிசேரியன் செய்துகொள்ள ஆர்வம் காட்டிவருகின்றனர்.
ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை தினம் என்பது வரலாற்றில் எப்படி முக்கியமான நிகழ்வோ அப்படி தங்கள் குழந்தைகளின் பிறந்தநாளும் வரலாற்றில் முக்கியமான நாளாக இருக்கவேண்டும் என்று இவர்கள் கருதுவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
தவிர, தமிழ்நாட்டின் சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை கொண்டாட பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அன்றைய தினம் ராமரின் நிறமாக கூறப்படும் நீல நிறத்தில் சீருடை அணிந்து மாணவர்கள் பள்ளிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி 11 நாள் விரத சம்பிரதாயம்… விரத முறைகள் குறித்த ஆகமவிதிகள்…