ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் ‘பால’ ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
இந்த சிலை பிரதிஷ்டை விழாவுக்கு நாடு முழுவதும் இருந்து முக்கியஸ்தர்கள் பலரும் அழைக்கப்பட்டுள்ள நிலையில் கும்பாபிஷேகத்துக்கு உண்டான உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக உ.பி. அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜனவரி 22 ம் தேதி தீபாவளி திருவிழா போல கொண்டாட அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
ராமரின் தாய் கௌசல்யா பிறந்த ஊரான சத்திஸ்கர் மாநிலத்தில் இருந்து அயோத்திக்கு 300 டன் அரிசி வைக்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனவரி 22ம் தேதி ஒருநாள் மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகள் அடைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
அயோத்தியில் மது விற்பனைக்கு தடை விதித்து உ.பி. அரசு உத்தரவு…