மகந்த் நிருத்ய கோபால் தாஸ்                                         யோகி

டில்லி

ச்ச நீதிமன்றம் கோவில் கட்ட தடை செய்தாலும் கோவில் கட்டப்படும் என ராமர் கோவில் தலைவர் கூறி உள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதாக கூறப்பட்ட பாபர் மசூதி இடிக்கப்பட்டு வரும் டிசம்பர் 6 ஆம் தேதி 25 வருடங்கள் ஆக உள்ளன.   இந்த இடம் குறித்து 13 மேல் முறையீட்டு வழக்குகளின் இறுதி வாதம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது.   ராம் ஜென்ம பூமி கோயில் அமைப்புத் தலைவர் மகந்த் நிருத்ய கோபால் தாஸ் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது அவர், “நாட்டு மக்கள் அனைவருமே இங்கு கோவில் அமைப்பதையே விரும்புகிறார்கள்.  எனவே உச்ச நீதிமன்றம் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் என நம்புகிறேன்.  ஒருவேள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கோவில் அமைக்க எதிராக வரும் என்றால் உத்திரப் பிரதேச சட்டசபையும், பாராளுமன்றமும் புதிய சட்டம் இயற்றி கோவில் கட்ட வழி செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் தடை செய்தாலும் நிச்சயமாக கோவில் கட்டப்படும். மோடியும் யோகியும் ஆளும் போது மட்டுமே இந்தக் கோவில் கட்டப்பட முடியும்.  அவர்கள் நிச்சயம் அதற்கான சட்டத்தை நிறைவேற்றுவார்கள்” எனக் கூறி உள்ளார்.