நெல்லை:
சுவாதி கொலை கைதி ராம்குமார் தற்கொலைசெய்து கொண்டார். அவரது உடல் இன்று சொந்த ஊரான மீனாட்சி புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் மரணமடைந்த ராம்குமார் உடல் நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
ram_final
உயர்நீதி மன்றம்  உத்தரவுப்படி சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் போஸ்ட்மார்டம்  நடத்தப்பட்ட பின் ராம்குமாரின் உடல் அவரது தந்தை பரமசிவத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் ராம்குமாரின் உடல் அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்று ராம்குமாரின் உடலுக்கு அவரது உறவினர்களும், கடையநல்லூர் எம்.எல்.ஏ. அபுபக்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித்தொடர்பாளர் வன்னியரசு உள்ளிட்ட பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மீனாட்சிபுரத்தில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள பாறையடி என்ற இடத்திற்கு ராம்குமாரின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது.