சென்னை: சென்னையில் 11ம் தேதி வரை ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப் படுவதாக மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு சிட்டி போலீஸ் விதி 1888-ன் படி கடந்த 27ம் தேதி முதல் வரும் 11ம்  தேதி நள்ளிரவு வரை போராட்டங்கள், பேரணி, ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலி, பொதுக்கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் நடத்த தடை  விதிக்கப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை  முழுவதும் செப்டம்பர் 1ந்தேதி முதல் வரும் 30ம் தேதி நள்ளிரவு வரை பொது இடங்களில் 4 பேருக்கு மேல் ஒன்று கூட கூடாது. மீறி  ஒன்று கூடினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது 144 சட்ட பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது  செய்யப்படுவார்கள்.

இவ்வாறு மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அறிவித்து உள்ளார்.