தமிழில் அருண்விஜய் நடித்த ‘தடையற தாக்க’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங். இதுதவிர பாலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ரகுல் பிரீத் சிங், சமூக வலைதளம் மூலம் தனது காதலனை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

நடிகரும், தயாரிப்பாளருமான ஜக்கி பக்னானி என்பவரை காதலிப்பதாக அவர் அறிவித்துள்ளார். “இந்த வருடம் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு நீ. என் வாழ்வை வண்ண மையமாக்கியதற்கும், என்னை இடைவிடாமல் சிரிக்க வைப்பதற்கும் நன்றி” என குறிப்பிட்டு காதலனுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.