டில்லி

காராஷ்டிரா நவநிர்மாண் சேனை தலைவர் ராஜ் தாக்கரே 14 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று டில்லியில் சோனியா காந்தியை சந்தித்தார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரச் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்தன. மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை எனினும் காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்தது. இக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே பல தேர்தல் பேரணிகளில் கலந்துக் கொண்டார்.

ராஜ் தாக்கரே சுமார் 14 ஆண்டுகள் கழித்து நேற்று டில்லி வந்தார். இதற்கு முந்தைய வ்ருகையில் அவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அதைப் போல் இம்முறையும் அவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இருவரும் தற்போதைய அரசியல் நிலை குறித்தும் மின்னணு வாக்கு இயந்திரம் குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.

நேற்று காலை ராஜ் தாக்கரே தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் அதிகாரிகளை சந்தித்தார். அப்போது அவர் நடைபெற உள்ள மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் வாக்குச் சீட்டு பயன்படுத்த வேண்டும் எனவும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன் படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுளார். அந்த சந்திப்புக்கு பிறகு ராஜ் தாக்கரே செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ராஜ் தாக்கரே, “மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு பதில் வாக்குச் சீட்டு முறைக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதை நான் ஏற்கவே எதிர்பார்த்தேன். அவர்களுக்கு இது போற ஒரு முக்கிய விவகாரத்தில் எனது கருத்து மீது விருப்பமில்லை என்பது நன்கு புரிந்தது.

அமெரிக்காவில் செய்யப்படும் சிப் மூலம் மின்னணு வாக்கு இயந்திரம் கட்டுப்படுத்த படுகிறது. கடந்த மக்களவை தேர்தலில் 370 தொகுதிகளீல் பதிவான வாக்குகளை விட அதிக வாக்குகள் எண்ணபட்டுள்ளன. தங்கள் பிரதிநிதியை மக்கள் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். இயந்திரம் அல்ல.” என தெரிவித்துள்ளர்.