மும்பை

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரான ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என போற்றப்படுபவர் ஆவார். இவர் 164 டெஸ்ட் பந்தயங்களில் 36 சதம், 56 அரை சதம் உள்ளிட்ட 13288 ரன்கள் எடுத்துள்ளார். இவருடைய சராசரி டெஸ்ட் ரன்கள் 52 ஆகும். அத்துடன் இவர் 344 ஒரு நாள் போட்டியில் விளையாடி உள்ளார். ஒரு நாள் போட்டிகலில் மொத்தம் 10889 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர்களை வளர்த்தெடுக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை இந்த மாதம் 1 ஆம் தேதியில் இருந்து நியமிக்கப்பட்ட போதிலும் இவர் இந்தியா சிமின்ட்ஸ் நிறுவனத்தில் பணியில் இருந்ததால் அங்கிருந்து ராஜினாமா செய்து விடுவிக்கபட்ட பிறகு பணியில் சேர்ந்துள்ளார்.

ராகுல் டிராவிடை பணியில் அமர்த்திய பிசிசிஐ அமைப்பு இவருடைய இந்தியா சிமிண்ட் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு இங்கு இணைய கால அவகாசம் கொடுத்து இருந்தது. சட்டப்படி ஒருவர் ஆதாயம் தரும் இரு பணிகளில் இருக்கக் கூடாது என்பதால் இவ்வாறு கூறப்பட்டது. அதற்கிணங்க இந்தியா சிமெண்ட்ஸ் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதும் டிராவிட் பணியில் அமர்துள்ளார்.

ராகுல் டிராவிட் பணிகாலம் எவ்வளவு என்னும் விவரம் இன்னும் வெளியாகவில்லை.