சென்னை: மாநிலங்களவைத் தேர்தலையொபட்டி,  அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல் செய்தார். அதுபோல கூட்டணி கட்சியான பாமக சார்பில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட அன்புமணி ராமதாஸ் வேட்புமனு தாக்கல் செய்தார்.

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேட்புமனுத் தாக்கல் செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தம்பிதுரை இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அதிமுகவின் தம்பிதுரை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகிய 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு உள்பட நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடையவுள்ளது. தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 இடங்களில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 4 இடங்கள் திமுகவுக்கும் 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்கும். இதன்படி அதிமுக சார்பில் தம்பிதுரையும் பாமகவுக்கு ஒரு இடம் வழங்கப்பட்ட நிலையில் அன்புமணியும் போட்டியிடுகின்றனர்.

அதிமுக சார்பில் தம்பிதுரை இன்று  முற்பகல் வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருத்தனர். அவரைத் தொடர்ந்து அன்புமணியும் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து,  திமுக  சார்பில், வா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்  மற்றும்  கூட்டணி கட்சியான தேமுதி‘ சார்பில் எல்கே சுதீசும்,, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  கிறிஸ்டோபர் திலக்கும் தாக்கல் செய்கின்றனர்.

[youtube-feed feed=1]