டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.. நான் மிகவும் வேதனைப்படுகிறேன்”  என அவைத் தலைவர் ஜகதீப் தங்கர் வேதனை தெரிவித்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை கிளப்பி அவைகளை முடக்கி வருகின்றனர். இதற்கிடையில், மக்களவையில், மத்திய பாஜக அரசுமீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நேற்று (ஆகஸ்டு 8ந்தேதி) தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று 2வது நாளாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில், இன்று காலை மாநிலங்கள‘ளவை கூடியதும், எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதியாக இருக்குமாறு, ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தங்கர் பல முறை கூறியும்,  எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் கேட்காமம்  கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவை   மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்ற மாநிலங்களவையில், இன்று  தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா உட்பட 6 மசோதாக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவை இன்று பிற்பகல் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.